Latest News
  • Follow Us
  • Call Us+91 9999955555
  • Login

தல வரலாறு


கொங்கு வேளாள கவுண்டர்களில் ஒரு பிரிவான ஈஞ்சன் குலத்தினரின் தெய்வமாக இவள் விளங்குகிறாள். ஈங்கூரில் காவிலுவர், சிங்களவர், மாவிலுவர், பூவிலுவர், வெள்ளை வேட்டுவன் ஆகிய இனத்தவர் வசித்து வந்தனர். அப்போது இவ்வூர் சோழ ஆட்சியின் கீழ் இருந்தது.

இந்த இனத்தவர்கள் அரசுக்கு வரி செலுத்தாமல் வந்தனர். அவர்களை சமாளிக்க வழியில்லாமல் தவித்த சோழன், நான்கு இனத்தவர்களையும் அடக்குபவர்களுக்கு காணி நிலம் கொடுப்பதாக அறிவித்தான்.

தஞ்சையில் வசித்து வந்த ஈஞ்சன் குலத்தவர்கள் ரகுநாதசிங்கய்ய கவுண்டர் என்பவரை தளபதியாக கொண்டு அவர்களை அடக்கினர். இதற்கு பிரதிபலனாக ஈஞ்சன் குலத்தினர் 88 ஊர்களை காணியாக பெற்றனர்.

ஈங்கூரில் வந்து குடியேறிய ஈஞ்சன் குலத்தினருக்கு, மூவேந்தர்களின் எல்லையாக திகழ்ந்த மாயனூர் அருகே மதுக்கரையில் அருள்பாலிக்கும் செல்லாண்டியம்மன் குல தெய்வமாக விளங்கினார். செல்லாண்டியம்மன் அடுத்து பெருமாளை தங்கள் இஷ்ட தெய்வமாக வணங்கினர்.

ஆண்டுதோறும் பெருமாளுக்கு முடிக்காணிக்கை செலுத்துவதற்காக ஸ்ரீரங்கத்துக்கு செல்லும் வழக்கத்தை ஈஞ்சன் குல மக்கள் கடைபிடித்தனர். ஒருமுறை ஸ்ரீரங்கம் செல்லும் போது இடையில் இளைப்பாறி செல்வதற்காக ஒரு இடத்தில் அமர்ந்தனர்...

பல மைல்கள் நடந்து சென்ற பிறகு பணமுடிப்பு இல்லாததை உணர்ந்த ஈஞ்சன் குல மக்கள், முடிப்பைத் தேடி வந்த வழியே திரும்பி சென்றனர். கடைசியாக தங்கிய இடத்தில் பணமுடிப்பு அப்படியே இருப்பதை கண்டு மகிழ்ச்சி அடைந்தனர். அதில் நாகப்பாம்பு சுற்றி காவல் காத்துக் கொண்டிருந்தது...

"ஈஞ்சனுக்கு எங்கும் காணி" — மாவீரர் ரகுநாதசிங்க கவுண்டர்

திருக்காம்புலியூரில் தோரணம் கட்டி, மதுக்கரை செல்லாண்டியம்மனுக்கு பூசை போட்டு, கிராதகாதி ஜாதியரை வென்று 88 காணிகளை பெற்றவர். இவர் கிட்டத்தட்ட கொங்கதேசத்தையே திக்விஜயம் செய்தவர். நீலம்பூரில் வேணாவுடையாரால் வேண்டிக் கொண்டு போர் தொடுத்து வென்றவர்.

இன்று பல பட்டக்காரர்கள் உரிமை கொண்டாடும் காணிகள் எல்லாம் இவர் முதலில் பெற்றவை. எனவே இந்த காணிகளில் முதல் உரிமை கொண்டாடும் தகுதி ஈஞ்ச கூட்டத்தாருக்கே உள்ளது.

ஈஞ்சகுலக் காணிப்பாடல் :

பூந்துறையும் வெள்ளோடு புகழ்பரஞ் சேர்வழியும் வாய்ந்த பிடாரியூர் மண்ணறையும் - சேர்ந்தபுகழ் ஈஞ்சூர் பழனியூர் வாழ்கரையும் நீள்புலரி ஈஞ்சகுலக் காணி இது.

மற்றொரு காணிப்பாடல் தொட்டியம், பவித்திரம், முசிறி, வில்லிபுத்தூர், தெங்கூர், புகலூர், வடகரையாத்தூர், ... காடையூர் ஆகிய ஊர்களையும் காணியூராகக் குறிக்கிறது. (எண்பத்தெட்டு ஊர்கள் என அப்பாடல் குறிக்கிறது)